கம்பி குத்தியதில் பாடசாலை மாணவி வைத்தியசாலையில் அனுமதி.
பலாங்கொடை வெலிஙபொல பிரதான வீதியில் பயணித்த தனியார் பேருந்தின் மீது அதே வீதியில் இரும்பு கம்பிகளை ஏற்றி பயணித்த லொறி ஒன்றில் இருந்து இரும்பு கம்பிகள் பேருந்தின் கண்ணாடியை உடைத்துக் கொண்டு உட்புகுந்ததில் குறித்த பேருந்தில் பயணித்த
பாடசாலை மாணவி. இம்முறை கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரிட்சை எழுதும் மாணவி ஒருவர் பாரிய காயங்களுடன்
வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த மாணவி கல்வி பொதுத்தராதர சாதாரணதரப் பரிட்சை எழுதி விட்டு வீடு திரும்பும் போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தில் மாணவியின் கழுத்து மற்றும் முகத்தில் கம்பிகள் குத்தியதில் மாணவி பலாங்கொடை வைத்திய சாலையில் அனுமதித்த பின்னர் மேலதிக சிகிச்சைக்காக இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மாணவியின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இம்புலாமுற பிரதேசத்தில் இருந்து
பலாங்கொடை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும்
பலாங்கொடை இருந்து வெலிஙபொல நோக்கி பயணித்த
இரும்பு லொறி ஒன்றுமே இவ்வாறு
விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து பலாங்கொடை காவற்துறையினர் தெரிவிக்கையில்
ஓட்டுநரின் கவனயீனம் மற்றும் அதிக அளவில் கம்பிகளை ஏற்றியமை என காவற்துறையினர் தெரிவித்தனர்.
பேரூந்து மற்றும் பொறியின் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
M.F.M.Ali
Rathnapura
