குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உதவியமை மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரிலியே யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யுவதி 18 வயதுடைய வஸ்ஸாவுல்ல, இலுக்கின்ன, பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இந்த இளைஞன், கடந்த 22ஆம் திகதி தனது காதலியைப் பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதிக்கு சென்றிருந்த நிலையில் காணாமல் போருந்தார்.
இவ்வாறு காணாமல் போன இளைஞனின் சடலம் சிலாபம் – மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டிருந்தது.
சம்பவம் தொடர்பில், குளியாப்பிட்டிய வஸ்ஸாவுல்ல பகுதியைச் சேர்ந்த காதலியின் தந்தை மற்றும் தாய் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
