நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின சாரதி நேற்று இரவு 7:30 மணியளவில் திடீர் மரணம் அடைந்துள்ளார்.
குறித்த பஸ்ஸின் டயரில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக பயணிகளை இறக்கிவிட்டு பஸ் பயணித்த போது சாரதிக்கு ஏற்பட்ட திடீர் சுகயினத்தை தொடர்ந்து,லிந்துலை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். இருப்பினும் குறித்த சாரதி சிகிச்சை பலனின்றி சாரதி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவிக்கின்றனர். சடலம் வைத்திய சாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான விசாரணைகளை லிந்துலை போலீசார் முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் மரணித்த சாரதி 39 வயதுடைய கம்பளை பிரதேசத்தை சேர்ந்தவர் அவர். இச்சம்பவம் நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியின் மட்டுக்கலை சந்தியில் இடம் பெற்றுள்ளது.
கௌசல்யா
