கடந்த மாதம் 21 ம் திகதி தியத்தலாவ பகுதியில் இடம்பெற்ற பொக்ஷில் ( மோட்டார் கார்) பந்தையத்தில் ஏற்பட்ட விபத்தில் 7 பேர் மரணித்ததுடன் 21 பேர் காயமடைந்து தியத்தலாவ மற்றும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
காயமடைந்த அனைவரும் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பிய நிலையில் 16 வயதுடைய சிறுமி தொடர்ந்தும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார்
இதன் போது 16 வயதுடைய வெலகெதர கல்லேதண்ட வெளிமடை பகுதியைச் சேர்ந்த W.P. சத்சரணி காவின்யா எனும் சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்ததாக வைத்தியசாலையில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்
ராமு தனராஜா
