எல்ல வெல்லவாய வீதியில் கரந்தகொல்ல மலித்தகொல்ல பகுதியில் மண்சரிவு அபாயகரமான நிலையில் உள்ளதாக எல்ல பிரதேச செயலாளர் கயான் இந்திக்க தெரிவித்துள்ளார்.
இன்று (16) பெய்த அடைமழையின் காரணமாக குறித்த வீதியை தவிர்த்து மாற்று வீதியை பயன்படுத்துமாறு அவர் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
எல்ல பல்லகெடுவ ஊடாக பசறை வீதியையும் வெல்லவாய கொஸ்லந்த வீதியையும் பயன்படுத்துமாறு பிரதேச செயலாளர் சாரதிகளிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வீதியை மூடுவது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை எனவும், பதுளை மாவட்ட செயலாளர், பண்டாரவளை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கட்டிடம் ஆராய்ச்சி அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பிரதேச செயலாளர் கயான் இந்திக்க மேலும் தெரிவித்தார்.
ராமு தனராஜா
