பசறையில் இருந்து எல்ல ஊடாக பண்டாரவளை செல்லும் வீதி நமுனுகுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 21 மைல் கல்லுக்கு அருகில் E.G.K பகுதியில் பாரிய மண்மேடு சரிந்து வீதியில் வீழ்ந்தமையால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. குறித்த மண் மேட்டை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாகவும் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ராமு தனராஜா
