இரத்தினபுரி மாவட்டத்தில் பெய்துவரும் தொடர் மழையால் இரத்தினபுரி மாவட்டத்தில் உள்ள நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் நீர் வீழ்ச்சிகளை பார்வையிடுவது நீராடுவது போன்ற விடயங்களை முற்றாக தவிர்க்குமாறு இரத்தினபுரி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் இரத்தினபுரி மாவட்ட பொறியாளர் அபீத வன சுந்தர தெரிவித்தார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் 100 mm அதிகமாக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இதன் காரணமாக இரத்தினபுரி மாவட்டத்தில் பல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு முதலாம் இரண்டாம் கட்ட மண் சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இப்பகுதிகள் காணப்படும்(அளுபொல நீர் வீழ்ச்சி தெஹன நீர் வீழ்ச்சி, போபத் நீர் வீழ்ச்சி,தூவிலி நீர் வீழ்ச்சி,ஹல்எல்ல நீர் வீழ்ச்சி,தும்புஸ் நீர் வீழ்ச்சி,) இன்னும் பல நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
M.F.M.Ali
Rathnapura
