மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் தொடர் மழையால் நீர் ஏந்து பகுதியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது இதனால் மேல் கொத்மலை மற்றும் விமலசுரேந்திர ஆகிய நீர் தேக்கங்களின் வான் கதவு வழியாக நீர் வெளியேற்றப்படுகிறது.
அந்த அந்தப் பகுதிக்கு பொருப்பான பொலிஸ் அதிகாரிகள் இதனை தெரிவித்தனர்.
மேலும் மவுஸ்சாக்கலை கென்யோன் லக்சபான நவலக்சபான பொல்பிட்டிய கலுகல ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது உள்ளது காசல்ரீ நீர் தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது அதன் கொள்ளளவை எட்டி உள்ளது.
என் நேரத்திலும் வான் கதவு திறந்து விட பட்டுள்ளாம் ஆகையால் தாழ் நில பகுதியில் உள்ள அனைத்து மக்களும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட வேண்டுகோள் விடுக்கின்றனர்.
தொடர்ந்து சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட தொழிலாளர்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளது அத்துடன் பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் மிகவும் வீழ்ச்சி காணப் படுகிறது பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கபட்டுள்ளனர்.
