Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்கு அத்துமீறி நுழைந்தாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மீது குற்றம் சாட்டிய நிர்வாகம்
Breaking

உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்கு அத்துமீறி நுழைந்தாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் மீது குற்றம் சாட்டிய நிர்வாகம்

ThanaBy ThanaJune 2, 2024Updated:June 2, 2024No Comments2 Mins Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

அண்மையில் நுவரெலியா, உடரத்தல பிரதேசத்தில் தொழிற்சாலை ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்தாக குற்றம் சாட்டிய தோட்ட நிர்வாகம் மற்றும் கம்பனி அது தொடர்பில் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடொன்றையும் பதிவுசெய்திருந்தது. அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் நடந்துகொண்ட விதம் சர்வதேச தரத்தில் மேற்கொள்ளப்படும் தேயிலை உற்பத்திக்கு பங்கம் ஏற்படுத்தியுள்ளதாக மேலும் குற்றஞ்சாட்டியிருக்கிறது.

களனிவெளி தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான நுவரெலியா பேட்துரு தோட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலையில் இந்த சர்ச்சைக்குரிய கடந்தவாரம் சம்பவம் நடந்தது.

இது தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட தோட்டக்கம்பனி ,சர்வதேச தரம்வாய்ந்த தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதற்கு ஏராளமான தரச் சான்றிதழ்களைப் பெறுவது அவசியமாகும்.
இந்தத் தரச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்ட நிறுவனங்களில் அடிக்கடி கண்காணிப்பு சோதனைகள் நடப்பதுண்டு. குறிப்பாக உணவு, குடிபானம் உள்ளிட்ட உற்பத்திகளில் இந்த தரக் கட்டுப்பாடுகள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில், தொழிலாளர் பிரச்சினைகளைக் கையாளும்போது, அனுமதியின்றி உட்பிரவேசித்து, உற்பத்திகள் நடக்கும் இடத்தில் குழப்பம் விளைவிப்பது அந்த உற்பத்தித் துறைக்கும், அந்த தொழிற்சாலைகள் பெற்றுள்ள தரச் சான்றிதழ்களுக்கும் சிக்கல்கள் ஏற்படும். குறிப்பாக இவ்வாறான தொழிற்சாலைகளுக்குச் செல்லும்போது, உரிய அனுமதியுடன் செல்வது கட்டாயமாகும்..

தொழிலாளர் பிரச்சினைகளை தொழில்சார் ரீதியாக கம்பனிகளுடன் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக சர்வதேச வர்த்தகம் சார் உற்பத்திகளின் போது அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்துகொள்வது எதிர்காலத்தில் சர்வதேச அளவில் பெற்றுள்ள வர்த்தக நாமத்திற்கு பங்கம் விளைவிக்கும் என்று அது மேலும் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், தொழிலாளர் பிரச்சினைகளை உரிய முறையில் கையாள்வது அவசியம் என்றும், அரசியல் பலத்தைப் பயன்படுத்தி இவ்வாறு நடந்துகொள்வது ஒட்டுமொத்த தேயிலை சன்நாமத்திற்கும் பங்கம் விளைவிக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக பிரச்சினைகளின் போது இதனைவிட ஆக்கபூர்வமாக, சட்டரீதியாக அணுகுவது எதிர்காலத்தில் தொழிலாளர்களின் நன்மைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கு உதவியாக இருக்குமே தவிர, அரசியல் பலத்துடன் இவ்வாறு நடந்துகொள்வது எவ்வகையிலும் பயனளிக்காது என்றும் பெருந்தோட்ட துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த நிலையில், அமைச்சர் ஜீவன் தொண்டமானின் செயற்பாடுகளை அரசியல் விமர்சகர்களும், சிங்கள தேசிய ஊடகங்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பின்னணி :
நுவரெலியா, நானுஓயா உடரதல்ல தோட்டத்தில் கம்பனிக்குச் சொந்தமான தோட்டத்தில், தேயிலை உற்பத்திக்குப் பதிலாக, கோப்பி பயிருடவதற்காக குறித்த நிறுவனம் பேக்கோ இயந்திரத்தைப் பயன்படுத்தி, அந்தத் திட்டத்தை ஆரம்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த பிரதேசத்தில் இரண்டு தோட்டத் தலைவர்கள் இருவர் எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

களனிவெளி தோட்டக் கம்பனிக்குச் சொந்தமான நுவரெலியா பேட்துரு தோட்டத்தில் உள்ள தேயிலை உற்பத்தித் தொழிற்சாலையில் இந்தச் சம்பவம் நடந்தது. இதனையடுத்து குறித்த இரண்டு ஊழியர்களின் செயற்பாடுகள் குறித்து அந்த நிறுவனம் விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

https://we.tl/t-06XXB4VCJs

அதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கம்பனி சார்பில் பேட்ரு தோட்ட முகாமையாளரால் நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு ஒன்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேலுக்கு எதிராக செய்யப்பட்ட நிலையில் அது தொடர்பான விசாரணைகளுக்கு நேற்று அமைச்சர் ஜீவன் தொண்டமான் உட்பட குழுவினர் சென்ற நிலையில் குறித்த முறைப்பாடு மீள வாபஸ் பெற்றதாக எமது செய்தியாளர்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் பி .சக்திவேல் நாங்கள் மிகவும் நேர்மையான முறையில் பேச்சுவர்த்தைகளில் ஈடுபட்டோம் ,எனினும் தோட்ட நிர்வாகம் அங்குள்ள மூன்று தோட்ட தலைவர்கள் உட்பட சிலருக்கு வேலை நிறுத்தம் செய்திருக்கின்றார்கள் ,அப்படி ஒரு அநீதி நடந்திருக்கும் பொழுது அதை தட்டி கேக்கும் பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது மேலும் அவர்கள் முறையாக பேசும் பொழுது செவிசாய்க்காமல் இருந்தார்கள் ,அவர்களுக்கும் தேவை நாங்கள் அராஜகமான முறையில் நடப்பதுதான் என்று தெரிவித்தார்.

https://fb.watch/sqSyUV3NKe/?mibextid=Nif5oz

வினோ

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.