நூற்றாண்டு பழைமை வாய்ந்த பசறை, கிக்கிரிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலய ஜீரணோத்தாரண அஷ்டபந்தன பிரதிஷ்டா மஹா கும்பாபிஷேக பெருவிழா இன்று ( 03) திங்கட்கிழமை பூர்வாங்க கிரியைகளுடன் ஆரம்பமாகி பூஜை வழிபாடுகள் நடைபெற்றுவருகின்றன.
நாளை (04) செவ்வாய்க்கிழமையன்று அடியார்கள் தெய்வீக விக்கிரங்களுக்கு எண்ணெய்காப்பு சாத்துதல் நடைபெறும். நாளை மறுதினம் (05) புதன்கிழமையன்று கும்பாபிஷேக பெருஞ்சாந்தி விழா இனிதே நடைபெறவுள்ளது.
சிவாகம சக்கரவர்த்தி வேதாகம வித்தியாபதி சிவஸ்ரீ மஹாதேவ ஸ்ரீவத்சாங்க குருக்கள் ( இணுவில் ) தலைமையில்சர்வ சாதகமும், சிவாகம கிரியா திலகம் ஜெயராம் நிதர்சன் குருக்கள் பிரதிஷ்டா பிரதம குருவாகவும் பக்திப்பூர்வமாக கிரியைகளை ஆற்றுகின்றனர்.
சித்தர்களின் குரல் அமைப்பின் ஆசியுடன் நடைபெறும் கும்பாபிஷேக பெருவிழாவில் உலகப்புகழ் நாதசக்கரவர்த்தி ஈழநல்லூர் பி.பாலமுருகன் தலைமையிலான குழுவினரின் மங்கள நாதம் இசை நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.
இதன்போது தவில் சக்கரவர்த்தி ஈழநல்லூர் செந்தில்நாதன், இளம் நாதஸ்வர வித்துவான் பாலமுருகன் சாரங்கன், இளம் இசை வயலின் வித்தகர் இராசரத்தினம் நிரோஷன், வீணைவாத்திய சிதம்பரம் இசைமைந்தன் பத்மநாதன் சிவமைந்தன், மிருதங்கங்க இசை வித்தகர் சுரளிதரன் சுலக்ஷன் ஆகியோரும் பக்தி இசை நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மெய்யடியார்கள் அனைவரும் கும்பாபிஷேக பெருவிழாவில் கலந்துகொண்டு எல்லாம் வல்ல இறையருளைப் பெற்றுய்யும்மாறு ஆலய அறங்காவலர் சபையினர் அன்புடன் அழைக்கின்றனர்.
( ந.மலர்வேந்தன் )
