அண்மையில் வெளியான உயர்தர பெறுபேறுகளின் படி கே / தெஹி /பூனுகல தமிழ் மகா வித்தியாலயம் மூன்றாவது வருடமும் சாதித்துள்ளது.
அந்தவகையில் பரீட்சைக்கு தோற்றிய 13 மாணவர்களும் சித்தியடைந்துள்ளதோடு 8 மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் தகுதியை பெற்றுள்ளனர். 2 மாணவர்கள் 3 A சித்திகளை பெற்றுள்ளமை பெருமைக்குறிய அம்சமாகும். M. ஜெயச்சந்திரன் 3A
R. அசோஜ் 3A எந்த அடிப்படை வசதிகளும் இல்லாத நிலையில் உயர்தரம் ஆரம்பித்த மூன்றே வருடத்தில் 25 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்கலைக்கழகம் செல்லும் வாய்ப்பினை பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும். அதிலும் குறிப்பாக இரண்டு மாணவிகள் சட்டத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


