கொத்மலை பூண்டுலோ கைப்புகலை தோட்டத்தில் கால்நடை வளர்ப்பில் ஈடுபடும் பண்ணையாளர்கள் பெரும் பாதிப்பு
கடந்த ஒருவாரமாக அவர்கள் வளர்க்கும் மாடுகளின் உடம்பில் கொப்பளங்கள் உருவாகி உடைந்து காயங்கள் ஏற்பட்டு நோய் ஏற்பட்டுள்ளதால் மாடுகள் நோய்வாய் பட்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது.
அத்தோடு சிகிச்சை வழங்குவதற்காக அதிக செலவழித்தும் இதுவரை மாடுகள் நோயில் இருந்து. காப்பாற்றப்படவில்லை. பண்ணையாளர்கள் கவலை அடைகின்றனர்.
அதேவேளை அதிகமான மாடுகள் வீடுகளில் வைத்திருக்கின்ற மையும் குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இத்தோட்டத்தில் 43 குடும்பங்களை சேர்ந்தவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கால்நடை ஊடாகவே இவர்களின் வாழ்வாதாரம் தொடர்கின்றது.
இந்த நோயின் காரணமாக பால் உற்பத்தி குறைந்துள்ளதால் குடும்ப வருமானமும் குறைந்துள்ளது இதனால் இவர்கள் செலவு செய்த பணத்தைக் கூட மீண்டும் பெற்றுக்கொள்ள முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு கால்நடை வளர்ப்பாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
அரச வைத்தியர்கள் வருகை தந்து சிகிச்சை மாடுகளுக்கு வழங்கினாலும் அதற்கான கட்டணத்தையும் பணியாளர்களை செலுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.
இதனால் கால்நடை வளர்ப்பார்கள் பெரும் நஷ்டத்தை எதிர் கொண்டு வருகின்றனர்
இதுவரை நோயினால் நான்கு பசுக்கள் இறந்துள்ளதால் கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய் வரை விளக்க வேண்டிய நிலையம் இன்னும் சில மாடுகள் இறக்கும் தருணத்தில் இருக்கின்றவை குறிப்பிடத்தக்கதாகவும்.
மேலும் தற்போது உள்ள பொருளாதாரப் பிரச்சனையில் இவர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளோடு மட்டும் ஒரு பிரச்சனை இந்த மாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நோயாகும் எனவே அரசு அதிகாரிகள் உடனடியாக கவனம் செலுத்தி பண்ணையாளர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கி நோயினால் பிரிக்கப்பட்டிருக்கின்ற மாடுகளையும் காப்பாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென இங்குள்ள மக்களின் எதிர்பார்பாக இருக்கின்றது.
