கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால் நீர் தேக்க பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது உள்ளது.
அதன் படி மவுஸ்சாக்கலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்ட இன்னும் 12 அடஇ10 அங்குலம் மட்டுமே நிறைய உள்ளது அதன் கொள்ளளவு 120 அடியை எட்ட அதே போல் கென்யோன் நீர் தேக்கத்தின் நீர் மட்டம் இன்னும் 3 அடி 03 அங்குலம் மட்டுமே நிறைய உள்ளது அதன் கொள்ளளவு 56 அடி யை உயர்ந்ததுள்ளது.
அதேபோல் காசல்ரீ,மேல் கொத்மலை, விமலசுரேந்திர, பொல்பிட்டிய,கலுகல, லக்சபான ,நவலக்சபான ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்தது உள்ளது.
கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் கடுமையான பணி மூட்டம் காணப் படுகிறது அத்துடன் கடுமையான குளிரான காலநிலையை தோன்றியுள்ளது.
சீரற்ற காலநிலை காரணமாக பெருந்தோட்ட மற்றும் கிராம பகுதிகளில் தடிமன், இருமல், காய்ச்சல் போன்ற நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர்.
