நுவரெலியா கல்வி வலயத்தின்
அக்கரப்பத்தனை பிரதேசத்தின் பாடசாலையான
நு/கிளாஸ்கோ தமிழ் வித்தியாலயத்தின் மற்றுமொரு வரலாற்று நிகழ்வாக 2024 /06/10 இன்றைய தினம் பாடசாலையின் மேல்மாடி கட்டிடத்திற்கான நிர்மாண ஆரம்ப நிகழ்வானது பாடசாலையில் இடம்பெற்றமையானது குறிப்பிடத்தக்கதாகும்.
அந்த வகையில் இப்பாடசாலையானது தரம் 1 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களை கொண்டமைந்த பாடசாலையாக காணப்படுகின்ற போதிலும் மாணவர்கள் கல்வி கற்பதற்கான போதியளவு வகுப்பறை இடவசதி இல்லாத குறையே இவ்வளவு காலமாக இருந்து வந்தது எனவே தான் இக்குறையினை நிவர்த்தி செய்யும் வகையிலாக பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலை சமுகத்தின் முயற்சி வெற்றியளிக்கும் வகையிலாக முன்மாரியான செயலாற்றிருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினரும்,
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தவிசாளருமான மருதபாண்டி ராமேஸ்வரன் அவர்களின் நிதியொதுக்கீட்டின் கீழ் இவ் பாடசாலையின் மேல் மாடி கட்டிட நிர்மாண பணிக்கான நிதி பங்களிப்பானது வழங்கப்பட்டுள்ளமை போற்றத்தக்கதாகும்.
இந் நிகழ்வானது பாடசாலையின்
அதிபர் V.கருணாநிதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றதோடு விசேட அதிதியாக முன்னால் மாகாண சபை உறுப்பினர் P.சக்திவேல் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி P.S. பிஹிலேகெதர அம்மையாரும், நுவரெலியா கல்வி வலயத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் கணேசராஜ் மற்றும் கோட்டக்கல்வி பணிப்பாளர் N.கிருபாகரன் மற்றும் அக்கரப்பத்தனை பிரதேச பாடசாலைகளின் அதிபர்கள் முன்னால் பிரதேச சபை தவிசாளர்கள் மற்றும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் பெற்றோர்கள் ,மாணவர்கள் என அனைவரும் கலந்து சிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

