எக்கிரியவில் இருந்து மீகாகியூல செல்லும் வீதியில் மண்மேடு சரிந்துள்ளதால் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது.
மீகாகியூல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட மீகாகியூலயிலிருந்து எக்கிரிய செல்லும் வீதி வெலஹன பகுதியில் பாலத்திற்கு அருகாமையில் மண்மேடு சரிந்து விழுந்தமையால் குறித்த பகுதியிலான போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது நேற்றிரவு முதல் பெய்து வரும் பலத்த மழை காரணமாக இன்று காலை சுமார் 8:30 மணியளவிலேயே மண்மேடு சரிந்து விழுந்து உள்ளது.
ராமு தனராஜா