பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில்
டெங்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இம்புல்பே பிரதேச
சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் சுகாதார பரிசோதக அதிகாரி t.c.p. பிரனாந்து தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவில்
டெங்கு நோய் பரிசோதனையின் போது இந்த விடயம் கண்டறியப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுற்றாடலை சுத்தமாக வைக்குமாறு மக்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சுற்றாடலை பாதுகாக்க தவறும் பொதுமக்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.மிக விரைவாக டெங்கு காய்ச்சலால் பரவும் பிரதேசமாக பலாங்கொடை இம்புல்பே பிரதேச செயலாளர் பிரிவு காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு அவர் தெரிவித்தார்.
MOHAMED ALI