நாடு தழுவிய ஆசிரியர்,அதிபர்களின் போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையில் வலப்பனை ,ஹங்குரன்கெத வலய ஆசிரியர்,அதிபர் ,ஆசிரிய ஆலோசகர்கள்
இராகலை நகரத்தில் பாரிய ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து இன்று இருந்தனர்.
ஆசிரியர் அதிபர் கூட்டுத்தொழிற்சங்கம் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தி இருந்தது. ஆர்ப்பாட்டத்தின் போது ,ஆசிரியர் அதிபர் சம்பள முரண்பாட்டின் எஞ்சிய 2/3 னை உடனடியாக வழங்கு,சகல மாணவர்களின் கல்வி உரிமை உறுதிசெய், பாடசாலையின் அன்றாட செலவினங்களை பெற்றோர்கள் மீது சுமத்தாதே ஆகிய கோசங்களை பதாதைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றதுடன் கல்வி அமைச்சு உட்பட அரசாங்கத்திற்கு எதிராகவும் கோசங்களை எழுப்பினர்.










சசி