இன்றைய தினம் இடம் பெற்ற வலய மட்ட உதைப்பந்தாட்ட போட்டியில் கொட்டகலை பாடசாலை மாணவர் கள் அசத்தல் வெற்றி.
அந்த வகையில் இருபது வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தையும் , பதினெட்டு வயதுக்கு உட் பட்ட ஆண்கள் பிரிவில் முதலாம் இடத்தையும் , பதினாறு வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் , பதினேழு வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் ,இருபது வயதுக்கு உட் பட்ட பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று வலய மட்ட அளவில் இடம்பெற்ற அனைத்து வயது பிரிவு உதைப்பந்தாட்ட போட்டிகளிலும் கொட்டகலை த.ம. வி மாகாண மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த வருடமும் கொட்டகலை பாடசாலை மாணவர்கள் தேசிய மட்டம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிட தக்கது.
இவ் அணிகளினுடைய பயிற்றுவிப்பாளராக ஆசிரியர் ரா. திவாகரன் அவர்கள் செயற்பட்டிருந்தமை குறிப்பிட தக்கது. இவ் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அதிபர், பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், விளையாட்டு பயிற்று விப்பாளர் யோகராஜ் அனைவருக்கும் வாழ்த்துக்களை பாடசாலை சமூகம் தெரிவிக்கின்றது.
