மலையக பகுதிகளில் புகையிரதத்தில் பயணிக்கும் வெளிநாட்டு உள்நாட்டு சுற்றுலா பயணிகள் சிலர் புகையிரத பலகைகளில் தொங்கியவாறும், புகையிரதத்தில் பயணிக்கும் போது பாதுகாப்பற்ற ஆபத்தான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக ஏனைய பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஓஹியாவுக்கும் பட்டிப்பொலவுக்கும் இடையில் புகையிரதப் பலகையில் தொங்கிக் கொண்டிருந்த உக்ரேனியப் பெண் கடந்த (15) இடையில் தவிர தரையில் விழுந்து படு காயமடைந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே போல பலர் சுரங்க பகுதியில் மற்றும் தவரி விழுந்து மரணித்து உள்ளார்கள் எனவும்,
நாவலப்பிட்டியில் இருந்து பதுளை புகையிரத நிலையம் வரையான மலையக புகையிரதத்தில் பயணம் செய்யும் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பலர் புகையிரதப் பலகைகளில் தொங்கிச் செல்வதாகவும், சிலர் வெளிநாட்டவர்கள் புகையிரதப் பலகைகளில் தொங்கியவாறு செல்பி எடுப்பதாகவும், அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாறான செயல்களில் ஈடுபடும் சுற்றுலாப் பயணிகள் சில சமயங்களில் ரயிலில் இருந்து தவறி விழுந்து விபத்துகள் ஏற்படுவதாக ரயில் பயணிகள் கூறுகின்றனர்.
மலையக புகையிரத பாதையில் பாதுகாப்பற்ற முறையில் புகையிரதங்களில் பயணிக்கும் உள் நாட்டு,வெளிநாட்டவர்களுக்கு அறிவிக்கும் நடவடிக்கையை ரயில்வே அதிகாரிகள் உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென புகையிரத பயணிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலியா நிருபர்
