தமக்கு அரசாங்க வேலைகளை வழங்குமாறு கோரி மலையக வேலையற்ற பட்டதாரிகளால் கடந்த 16ஆம் திகதி ஹட்டன் நகரில் கவனயீர்ப்பு பேரணியும் கவனயீர்ப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
ஹட்டன் நகர மையத்தில் இருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்ட பேரணி ஹட்டன் மல்லியப்பு சந்தி வரை சென்று அங்கு பேரணி ஆர்ப்பாட்டம் இடம் பெற்றது.
தற்போது தோட்ட பகுதியில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளில் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை நிலவுவதாகவும், அந்த ஆசிரியர் பற்றாக்குறையை நிரப்புவதற்கு வேலை அற்ற நிலையில் இருக்கும் பட்டதாரிகளை ஆசிரியர் பதவிகள் வழங்க முடியும் எனவும் ஆர்பாட்டத்த்தில் கலந்து கொண்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பல்வேறு அரசுப் பணிகளுக்காக பட்டதாரிகளாக உள்ள தமக்கு அந்தப் பதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தப் போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மஸ்கெலியா நிருபர்.
