ஹட்டன் மற்றும் மஸ்கெலியா பிரதேசங்களில் உள்ள மதுபானசாலைகளில் மதுபானங்களை திருடுவதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை கைது செய்து உள்ளனர் .
பத்தனை, லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இடம் பெற்ற பல திருட்டு சம்பவங்கள் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஹட்டன் பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஒருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது,தாம் ஹட்டன் நகரிலுள்ள இரண்டு மது பான சாலைகளிலும் திருடியாக தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் வேறு திருட்டு சம்பவங்களோடு தொடர்பு இருக்கின்றதா என்பது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.
