டயகம லிந்துலை பிரதான வீதி கடந்த 10 வருடங்களாக புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளாத காரணத்தினால் இதனை உடனடியாக புனரமைப்பு செய்யுமாறு கோரி தனியார் பேருந்து சாரதிகள் தங்களின் பேருந்துகளை நிறுத்தி 18அன்று காலை முதல் நாகசேனை நகர சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
குறித்த பாதை குன்றும் குழியுமாக காணப்படுவதோடு பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது.
இதனால் தொடர்ந்து பொதுமக்களும் பாடசாலை மாணவர்கள் நோயாளர்கள் என பலரும் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்நிலையில் இப்பாதையை புனரமைப்பு செய்வதாக 2014 ஆம் ஆண்டு அப்போது ஆட்சியில் இருந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அடிக்கல் நாட்டி வைத்தார்.
பாதையை அகலப்படுத்தும் பணி ஆரம்பிக்கப்பட்ட போதிலும் இடையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அதேவேளை ஜீவன் தொண்டமான் ஊடாக இப் பாதையை புனரமைப்பு செய்வதாக கோரி லிந்துலை பகுதியில் 2022 ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது பணிக,ள் ஆரம்பிக்கப்பட்டன அதுவும். கைவிடப்பட்ட நிலையில் பாதை சீர்திருத்தம் செய்வதற்காக கொண்டு வரப்பட்ட அனைத்து பொருட்களையும் .மீள கொண்டு சென்றுள்ளனர்.
தற்போது பாதை மோசமான நிலையில் காணப்படுவதால் இப்பாதையை உடனடியாக புனரமைப்பு பணி மேற்கொள்ளுமாறு கோரி வாகன சாரதிகள் பிரதேச மக்கள் பொதுமக்கள் இணைந்து இன்று ஆர்ப்பாட்டத்தை நாகசேன பகுதியில் முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம் சுமார் ஒரு மணி நேரம் இடம்பெற்றது இதில் 60க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டம் காரணமாக ராணிவத்தை, மெராயா ,டயகம அக்கரப்பத்தனை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் போக்குவரத்து முழு நாளும் பாதிக்கப்பட்டுள்ளது ,போக்குவரத்து இன்மையால் இன்று காலை பாடசாலை மாணவர்கள் பெரும் சிரமத்துக்கு மத்தியில் பாடசாலைக்கு வருகை தந்ததை காணக்கூடியதாக இருந்தது .அதே வேலை பொதுமக்களும் தங்களுடைய தேவைகளை செய்து கொள்வதற்காக வெளியிடங்களுக்கு செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.அத்தோடு அரசு பேருந்து மாத்திரமே இப்பாதையில் இன்று சேவையில் இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். பாதையை பல்லாயிரம் மக்கள் பயன்படுத்துகின்றனர்.இப்பகுதியில் வைத்தியசாலைகள் மற்றும் அதிகமான பாடசாலைகள் இருக்கின்ற அமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
கோளசல்யா
