மலையகத்தின் கம்பளை இந்துக்கல்லூரியின் முன்னாள் மாணவன் சீனாவில் இடம்பெறவுள்ள டைப்பே ஜுடோ ஆசியன் போட்டிக்கு இலங்கை சார்பில் பங்குப்பற்றும் வாய்ப்பைப் பெற்றார்.
இவர் நாவலபிட்டியவில் அண்மையில் இடம்பெற்ற 48 ஆவது தேசிய விளையாட்டுப்போட்டியில் 90 kg ஜூடோ போட்டியில் தொடர்ச்சியா 08 வருடங்கள் சாம்பியனாக இருந்தவரை வீழ்த்தி தங்கம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இலங்கை பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றும் இவர் உள்நாட்டில் இடம்பெற்ற பல்வேறு போட்டிகளில் தனது திறமை காட்டி இவ்வாறு சர்வதேச போட்டிகளுக்கு செல்லும் வாய்ப்பையும் பெற்றுள்ளார்.
