சர்வதேச சதுப்பு நில பூங்காவின் பிரதிநிதிகள் நகர்ப்புற சதுப்பு நிலங்களின் தேவை பாதுகாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட முகாமைத்துவம் செய்யப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டுகின்றனர். பத்தரமுல்லையில் உள்ள வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நடைபெற்று வரும் சர்வதேச சதுப்பு நிலங்கள் ஒன்றியத்தின் முதலாவது அவுஸ்திரேலிய நியூசிலாந்து மற்றும் ஆசிய மாநாட்டில் அவர்கள் இதனை வலியுறுத்தினர்.
சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் உள்ள காணி அபிவிருத்திக் கூட்;டுத்தாபனத்தினால் இது நடத்தப்படுகிறது.
உலகெங்கிலும் உள்ள 15 நாடுகளில் இருந்து கிட்டத்தட்ட 100 சதுப்பு நில பூங்கா பிரதிநிதிகள் மாநாட்டில் கலந்து கொண்டனர். இந்தக் குழுவும் இன்று காலை தலங்கமவைச் சுற்றிப் பறவைகள் கண்காணிப்புச் சுற்றுலாவில் இணைந்து கொண்டது.
உலகின் முதல் நகர்ப்புற சதுப்பு நில பெருநகரமான கொழும்பின் சதுப்பு நிலங்களை தற்போது சதுப்பு நில பிரதிநிதிகள் கண்காணித்து வருகின்றனர்.
இன்று காலை தலங்கம ஏரியை சுற்றியுள்ள சதுப்பு நிலப்பகுதியை அவதானித்தனர். அதனுடன் தொடர்புடைய பறவைகளின் நடத்தை மற்றும் அப்பகுதியைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் கவனம் செலுத்தினார்கள்.
மாநாட்டின் மூன்றாவது நாளான இன்று, முதல் முறையாக இணைந்த பல வெளிநாட்டு சதுப்பு நிலப் பூங்காக்களுக்கு ஆசியா- அவுஸ்திரேலிய சதுப்பு நிலங்கள் ஒன்றியத்தில் அங்கத்துவம் வழங்கப்பட்டது. மாநாட்டின் நிறைவு விழா நாளை பிற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ளது. அங்கு, பத்தரமுல்லை தியசரு சதுப்பு நிலப் பூங்கா, நாட்டின் முன்னணி சதுப்பு நில பூங்காவாக அறிவிக்கப்பட உள்ளது.
முனீரா அபூபக்கர்
