STEM Team Hatton அமைப்பின் பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் தெரிவுசெய்வது தொடர்பான GCE (A /L) 2023 (2024) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு அன்று 17/06/2024 இ ணையவழியாக நடைபெற்றது.
குறித்த விழிப்புணர்வு நிகழ்வின் லிங் இணைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழகம் மற்றும் கற்கைநெறிகள் தெரிவுசெய்வது தொடர்பான GCE (A/L) 2023 (2024) மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வின் வீடியோ பதிவுகளை எமது STEM Team Hatton தளத்தில் பார்வையிடலாம்.
இந்த General Sessionஐ பல்கலைக்கழக பதிவினை மேட்கொள்ளவிருக்கும் எல்லா பிரிவு (Maths, Science, Technology, Arts and Commerce) விண்ணப்பதாரிகளும் பார்த்து அரச பல்கலைக்கழகங்கள் நடைமுறைகள் சார்ந்த மிக முக்கியமான பல விடயங்களை தெரிந்துகொள்ளலாம்.
தற்போது GCE (A/L) மற்றும் GCE (O/L) பரீட்சைக்காக தயாராகிக்கொண்டிருக்கும் மாணவர்களும் நேரம் ஒதுக்கி இந்த பல்கலைக்கழக நடைமுறைகளை அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு தங்களை தயார்படுத்திக்கொள்ளலாம்.
கடந்த (2023) வருடத்துடன் ஒப்பிடும்போது பல்கலைக்கழக அனுமதி எண்ணிக்கைகளில் இவ்வருடம் (2024) சில வேறுபாடுகள் உள்ளன. அவற்றின் விபரம் General Session வீடீயோவின் கடைசி பகுதியில் தரப்பட்டுள்ளது.
இது தவிர Maths, Science, and Technology பாடங்களுக்கான தனிப்பட்ட மேலதிக விளக்கங்கள் இந்த கட்கைநெறிகளில் உள்ள பல்கலைக்கழக பட்டப்படிப்பு, எதிர்கால வாய்ப்புகள் சம்பந்தமான தனித்தனியான வீடியோக்களையும் எமது வீடியோ தளத்தில் பார்வையிடலாம்.
மொத்தமாக 5 மணித்தியாலங்கள் விழிப்புணர்வு நிகழ்வு நடந்தது குறிப்பிடத்தக்கது (a 2-hour General Session, followed by 2-hour breakout sessions for each of the 3 streams, and concluding with a 1-hour discussion to answer questions from students and participants, inclding teachers and perants).
மாணவர்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ ஏதும் சந்தேகங்கள், கேள்விகள் இருப்பின் என்னையோ எமது குழுவினரையோ வீடியோ பதிவின் கீழே comment செய்வதன்மூலம் தொடர்புகொள்ளலாம்.
நன்றி
Dr. S.K. Navaratnarajah
Senior Lecturer – Engineering
University of Peradeniya
Founder & President – STEM Team Hatton
