தலவாக்கலை பேருந்து நிலைய கட்டிடத்தில் குளவி கூடு கட்டப் பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் தலவாக்கலை பிரதேசவாசிகள் மிகவும் அச்சம் அடைந்து உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
பேருந்து நிலைய கட்டிடத்தில் பெரிய குளவி கூடு இருப்பதாகவும், குளவி கூட்டை சுற்றி காகங்கள் மற்றும் புறாக்கள் சுற்றித் திரிவதால் அந்த பறவைகள் குளவி கூட்டை தாக்கி களைத்து விபத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
பேருந்து நிறுத்துமிடம் என்பதோடு அதனை சுற்றியுள்ள கடைகளுக்கு பள்ளி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் தொடர்ந்து செல்வதாகவும், குளவி கூடு இருப்பதால் அங்கு வருபவர்கள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், தலவாக்கலை நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.
