மத்திய மலைநாட்டில் நுவரெலியா மாவட்டத்தில் மேற்கு சாரல் பகுதியில் உள்ள மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கனத்த மழையுடன் கூடிய கடும் காற்று வீசுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக மலையக பகுதிகளில் உள்ள அனைத்து நீர் தேக்கங்களின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக மவுஸ்சாக்கலை ,கென்யோன் ,லக்சபான, நவலக்சபான ,பொல்பிட்டிய ,கலுகல, விமலசுரேந்திர ,காசல்ரீ ,மேல் கொத்மலை ஆகிய நீர் தேக்கங்களின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை எட்டி உள்ளது.
மலையக பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக கடும் குளிர் நிலவுகிறது.
பாடசாலை மாணவர்கள் வருகை மிகவும் வீழ்ச்சி கண்டுள்ளது.
மஸ்கெலியா நிருபர்.செ.தி.பெருமாள்.
