பொசன் பௌர்ணமியை முன்னிட்டு தலவாக்கலை வித்யாசேகர ஆரம்பப் பாடசாலை மாணவர்களால் வழங்கப்பட்ட பொசன் பக்தி பாடல் கச்சேரி அண்மையில் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, கல்லூரியில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலையும் திறந்து வைக்கப்பட்டதுடன், இந்நிகழ்வில் அதிபர் தலைமையில் ஆசிரியப் பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
மஸ்கெலியா நிருபர்.
