கொழும்பு நகரின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் 15 மணித்தியாலங்களுக்கு நிறுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) அறிவித்துள்ளது.
கொழும்பு, தெஹிவளை, கல்கிசை, கோட்டை, கடுவெல, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை மற்றும் முல்லேரியா ஆகிய பகுதிகளில் நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் நாளை காலை 9 மணிக்கு நீர் வெட்டு ஆரம்பமாகி நள்ளிரவு வரை நீடிக்கும் எனவும் அறிவித்துள்ளது.
அம்பத்தலே நீர் வழங்கல் அமைப்பின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அத்தியாவசிய பராமரிப்புப் பணிகளின் காரணமாகவே இந்த நீர் வெட்டு எனவும், மேலும் நீர் வெட்டுக் காலத்தில் நீரைச் சேமித்து வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்யுமாறு பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
ஷாக்சினி