தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் காலமானார்.
அவர் இறக்கும் போது வயது 91 ஆகும். சுகயீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே அவர் காலமாகியுள்ளார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
