Close Menu
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
What's Hot

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

August 10, 2026

கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

August 10, 2026

மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

August 10, 2026
Facebook X (Twitter) Instagram
Facebook X (Twitter) Instagram
Malayagam.lk
Subscribe
  • முகப்பு
  • இலங்கை
  • மலையகம்
  • வெளிநாடு
  • விளையாட்டு
  • ஆன்மீகம்
  • சினிமா
  • வாழ்க்கை
  • உள்நாட்டு செய்திகள்
  • விளம்பரங்கள்
Malayagam.lk
Home » பசறை – ஆசிரியை மீது மிளகாய் தூள் தூவி சங்கிலியை அறுத்து சென்ற நபர் கைது
மலையகம்

பசறை – ஆசிரியை மீது மிளகாய் தூள் தூவி சங்கிலியை அறுத்து சென்ற நபர் கைது

ThanaBy ThanaJuly 3, 2024No Comments1 Min Read
Facebook Twitter WhatsApp Email Telegram
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

பசறை கொட்டமுதுன பகுதியில் ஆசிரியர் ஒருவரின் கழுத்தில் இருந்த சஙகிலியை கண்ணுக்குள் மிளகாய் தூள் தூவி அறுத்து சென்றார் என்று சந்தேகிக்கப்படும் சந்தேக நபர் ஒருவரை இன்று காலை கைது செய்துள்ளதாக ஹிங்குருகடுவ பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 23 வயதுடைய புத்தலை பெல்வத்தை பகுதியை சேர்ந்த நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று மாலை பாடசாலை முடிந்து வீடு செல்லும் வழியில் மறைந்திருந்த நபர் ஒருவர் அவ்வழியே சென்று கொண்டிருந்த ஆசிரியையின் கண்ணுக்கு மிளகாய் தூள் தூவி விட்டு கழுத்தில் இருந்த சஙகிலியை அறுத்து கொண்டு காட்டுக்குள் ஓடியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர் ஊர் மக்களும் பொலிஸாரும் இணைந்து நேற்று மாலை காட்டுப்பகுதியில் தேடிய போதிலும் சந்தேக நபரை பிடிக்க முடியவில்லை. இருப்பினும் இன்று அதிகாலை காட்டுக்குள் இருந்த சந்தேக நபர் வீதிக்கு வந்து பேருந்தில் ஏற முற்பட்ட போது மறைந்திருந்த ஊர் மக்களும் பொலிஸாரும் சந்தேக நபரை மடக்கி பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் போது தான் கழுத்தில் அணிந்திருந்த சங்கிலியை சந்தேக நபர் அறுத்து கொண்டு ஓடுகையில் அது தங்க சங்கிலி அல்ல எனவும் அது பித்தளை எனவும் ஆசிரியரால் சந்தேக நபரிடம் கூறியதாக ஆசிரியர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஹிங்குருகடுவ பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி செனரத் பண்டாரவின் தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சந்தேக நபரை பசறை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Share. Facebook Twitter WhatsApp Email LinkedIn Telegram
Thana

    Related Posts

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கிராம உத்தியோகத்தர்களின் பணிப்புறக்கணிப்பு: பயணக் கொடுப்பனவு தாமதத்தால் இன்றும் நாளையும் சேவை பாதிப்பு

    August 10, 2026

    2026 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்: மாணவர்களுக்கான விசேட அறிவிப்புகள்

    August 10, 2026

    மதங்களின் பெயரால் மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்வகையிலான செயற்பாடுகளை தொடர்ந்து அனுமதிப்பது நாட்டுக்கு நன்மையான விடயமாக இருக்காது.

    August 9, 2026
    Editors Picks

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026

    ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் கைது செய்யப்பட்டுள்ளார். 

    August 10, 2026

    அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பான இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஜீவன் தொண்டமான் நடவடிக்கை!

    August 10, 2026

    கேகாலை பாடசாலையில் புலமைப்பரிசில் வினாத்தாள் தாமதம்: மாணவர்களுக்கு நீதி வழங்க இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்!

    August 10, 2026

    மாளிகாவத்தை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

    August 10, 2026
    Facebook X (Twitter) Instagram YouTube WhatsApp
    © 2026 Malayagam.lk. Designed by Gcloud.

    Type above and press Enter to search. Press Esc to cancel.