யாழ்ப்பாணத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செட்டிக்குறிச்சி பண்டந்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய குணசேகரம் வரதசிரோமணி என்ற பெண்ணே உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண் தனது வீட்டிற்கு அருகில் உள்ள காணியில் பனை ஓலைகளை வெட்டிக் கொண்டிருந்த போது குளவி தாக்கியுள்ளது.
குளவி கொட்டியதையடுத்து, குறித்த பெண் தெல்லிப்பளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், அங்கு அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஷாக்சினி