வி.தீபன்ராஜ்
பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்கள் மீண்டும் வீடு திரும்பினர்.
ஆசிரியர்கள் முன்னெடுத்து வரும் சுகவீன விடுமுறை போராட்டம் காரணமாக நானுஓயா பாடசாலையில் கல்வி நிலை இன்று (09) பாதிக்கப்பட்டிருந்ததுடன் பெற்றோரும் மாணவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டார்கள்.
சம்பள நிலுவையினை வலியுறுத்தி இன்றைய தினம் அதிபர்கள், ஆசிரியர்கள் சுகவீன போராட்டத்தில் ஈடுப்பட்டு வருக்கின்றனர்.
இன்றைய தினம் நுவரெலியா கல்வி வலயத்தில் உள்ள பாடசாலையில் ஆசிரியர்களின் வரவு குறைவானதாகவேயிருந்ததை காணமுடிந்தது.அத்துடன் பாடசாலைக்கு மாணவர்களின் வருகை குறைவான நிலையிலேயே இருந்ததுடன் பாடசாலைக்கு வருகைதந்த மாணவர்களில் மீண்டும் வீடு திரும்பிச் சென்றதை காணமுடிந்தது.
அதேபோன்று பாடசாலைக்கு பிள்ளைகளை கூட்டிவந்த பெற்றோரும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டதுடன் மீண்டும் பிள்ளைகளை அழைத்துச்சென்றதையும் காணமுடிந்தது. எவ்வாறாயினும் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டம் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் தெரிவிக்கின்றனர்.