நுவரெலியா மாவட்டம் வலப்பனை பிரதேசத்தில் ஊவா தமிழ் மகா வித்தியாலயத்திற்கு திங்கட்கிழமை (08) ஸ்மார்ட் வகுப்பறை புதுப்பிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.
குறித்த பாடசாலை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க “மலையக பிள்ளைகளின் வளர்ச்சியில் ஒரு மைல்கல்” என்ற தொனிப்பொருளின் கீழ் இடம்பெறும் பாடசாலை மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் செயற்படும் “பிரித்தானிய மலையக மக்கள் ஒன்றியம் ” அமைப்பின் ஏற்பாட்டில் தேவையான அனைத்து வசதிகளும் அடங்கிய நுண்திறன் வகுப்பறை (SMART CLASSROOM ) கையளிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஸ்மார்ட் வகுப்பறையை கடந்த 17 வருடங்களுக்கு மேலாக பிரித்தானியாவில் இயங்கி வரும் மலையக மக்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நானுஓயா பிரதான நகரில் இயங்கும் ரேஹா ஸ்டீல் ஹாட்வெயார் நிலையத்தின் உரிமையாளர் திருச்செல்வமும் இணைந்து கையளித்தனர்.
குறித்த நிகழ்வில் பிரித்தானிய மலையக மக்கள் ஒன்றியத்தின் தலைவர் சிவசங்கர் கலந்துகொண்டார்.
குறிப்பாக பிரித்தானிய மலையக மக்கள் ஒன்றியமானது பிரித்தானியாவில் பதியப்பட்ட மற்றும் இலங்கையின் மலையக மக்களின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபடும் ஓர் அமைப்பாக விளங்குவது குறிப்பிடத்தக்கது.







