தோட்டத் தொழிலாளர்களுக்கு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்ட 1700 ரூபாய் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும் நோக்கத்துடன் கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொழும்பில் அமைந்துள்ள முதலாளிமார் சம்மேலனத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் அமைப்பாளர் ரூபன் பெருமாள் உட்பட தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.