உத்தேச பொது நிதி முகாமைத்துவ சட்டமூலம் மற்றும் பொருளாதார மாற்றத்திற்கான சட்டமூலம் தொடர்பில் மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்வு நேற்று (10) பல்லக்கலேயில் உள்ள மத்திய மாகாண சபை வளாக கேட்போர் கூடத்தில் நடைப்பெற்றது.
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டலின் கீழ் மத்திய மாகாண ஆளுநர் அலுவலகம், மத்திய மாகாண சபை மற்றும் அரசாங்க தகவல் திணைக்களம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.
நிதி ஒழுக்கம் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பேணுதல், உலகப் பொருளாதாரப் போக்குகளுக்கு ஏற்ப உள்ளுர் பொருளாதாரத்தை வலுப்படுத்துதல், அதற்கான சட்டங்களை ஏற்றுக்கொள்வது குறித்தும் தெரிவிக்கப்பட்டதுடன், மத்திய மாகாண மாணவர் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுவர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மத்திய மாகாண ஆளுநர் லலித் யூ கமகே அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் சாந்தனி விஜேவர்தன, அரச நிதி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஜே.எம்.யு.பி.ஜெயமஹா, அரச நிதிக் கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் ஜயனி விக்கிரமாராச்சி, ஜனாதிபதியின் உதவிச் செயலாளர் டி.உமேஷா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.



