கினிகத்தேனை விகாரைக்கு அருகில் புதையல்களை தோண்ட வந்ததாக சந்தேகத்தின் பேரில் மூவர் கினிகத்தேனை பொலிஸாரால் நேற்று (11/07)கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கினிகத்தேனை பொலிஸ் அதிகாரியொருவர், கெனில்வொர்த் பிரதேசத்திலுள்ள பழைய ஆலயமொன்றுக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான குழுவொன்று தங்கியிருப்பதாக 119 அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கினிகத்தேன பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த இடத்திற்கு சென்று ஒருவரைப் கைது செய்து நடத்திய விசாரணையில், பூஜை நிமித்தம் குறித்த இடத்திற்கு வந்ததாகவும், அந்தச் சூழல் காரணமாக, அங்கு பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தெரிவித்தனர்.
குழுவினரை தொடர்ந்து விசாரணை செய்ததில் 04 ஜெனரேட்டர் வயர்கள், 250 கிராம் துப்பாக்கி குண்டுகள், கல் உடைக்கும் கருவிகள், கம்பி வடங்கள் மற்றும் பூஜை பொருட்கள் கண்டு பிடிக்க பட்டதாகவும்
குறித்த குழுவுடன் மற்றுமொரு குழுவினர் வந்துள்ளதாகவும், அந்தக் குழு தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிய வந்ததையடுத்து, ஹட்டன் பொலிஸ் அத்தியட்சகர் நிபுன தெஹிகமவின் ஆலோசனையின் பேரில், கினிகத்தேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.
