ஹப்புத்தலை- மேலதிக வகுப்பிற்காக வீட்டிலிருந்து ரயில் தண்டவாளம் வழியாக சென்றுக்கொண்டிருந்த சிறுமியை பலவந்தமாக கடத்திச் செல்ல முயற்சித்த குற்றசாட்டில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்துள்ளதாக தெரிய வருகின்றது.
குறித்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி ஹப்புத்தலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹப்புத்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
