முதலுதவி பொருட்கள் கையளிப்பு அக்கரப்பத்தனை நு/ ஆட்லோ தமிழ் வித்தியாலயம், நு /கிளாஸ்கோ தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு செல்வி எம். பவித்ரா (தாதி) அவர்களினால் வைத்தியசாலைக்கு மிகத்தொலைவில் உள்ள இரண்டு பாடசாலைகளுக்கு மாணவர்கள் தீடீர் விபத்தின் போது ஏற்படும் காயங்களுக்கு மருந்து கட்டுவதற்கான மருத்துவ பொருட்களையும், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை முதலுதவி தொடர்பான விளக்கமளிக்கப்பட்டு இன்றைய தினம் (19/01/23 )இரு பாடசாலைகளின் அதிபர்களிடமும் கையளிக்கப்பட்டது.
இதே வேளை இவ்வுதவி இவரது தனிப்பட்ட நிதி மூலமாக இப் பருந்தோட்ட பாடசாலைகளுக்கும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சரத்