கடந்த 20ஆம் திகதி கொழும்பு ஹட்டன் வீதியின் கினிகத்தேன தியகல பகுதியில் கார் ஒன்று தீப்பிடித்து எரிந்ததால் அந்த வீதியில் இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் போக்குவரத்து தடைப்பட்டிருந்தது.
பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற இந்த கார் கினிகத்தேன தியகல பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்ததில் கார் ஒன்று முற்றாக எரிந்து நாசமானது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த கினிகத்தேனை பொலிஸ் அதிகாரி ஒருவர், கடந்த 20ஆம் திகதி பாணந்துறையிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்ற கார் ஒன்று கினிகத்தேன தியகல பிரதேசத்தில் தீப்பிடித்து எரிந்துள்ளது.
தீயினால் கார் முற்றாக எரிந்து நாசமானதுடன், தீ விபத்து ஏற்பட்ட போது காரில் ஐந்து பேர் கொண்ட குழு பயணித்துள்ளதுடன் அவர்கள் காரில் இருந்து இறங்கிய போது ஒருவருக்கு மட்டும் சிறு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதோடு ஏனையவர்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
இந்த தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் ஆரம்பித்துள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
மஸ்கெலியா நிருபர்.
