சூரியவெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சூரியவெவ மஹகல்வெவ வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகி அருகில் உள்ள கால்வாயில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. குமாரகமவில் இருந்து சூரியவெவ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தின் போது முச்சக்கரவண்டி சாரதி பலத்த காயமடைந்து சூரியவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனமல்வில பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
