கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (24) அதிகாலை 3 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல் அடுத்த 24 மணிநேரத்திற்கு அமுலில் இருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சுழற்சி தென்மேற்கு பருவமழை காரணமாக, அரபிக் கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பகுதியில் மிக பலத்த காற்று வீசக்கூடும் எனவும் கடல் மிகவும் கொந்தளிப்பாக இருக்கும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
