டிபர் ரக லொறி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளகியுள்ளது.
பதுளை மஹியங்கனை வீதியில் புஸ்ஸல்லாவ பகுதியில் ஆறாவது மைல் கல்லுக்கு அருகே டொலமைட் ஏற்றி வந்த டிபர் ரக லொறி ஒன்று முன்னால் சென்ற வேன் ஒன்றை முந்தி செல்ல முற்பட்ட வேளை மின்கம்பத்தில் மோதுண்டு வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த லொறி கண்டி திகன பகுதியில் இருந்து டொலமைட் ஏற்றி கொண்டு பதுளை நோக்கி வந்த வேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. தெல்தெனிய ரங்கல பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய லொறியின் சாரதி பலத்த காயமடைந்து நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா