கடந்த ஜூலை 8ஆம் திகதி, அதுருகிரிய பொலிஸ் பிரிவில் உள்ள பச்சை குத்தும் நிலையத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான விசாரணையின் போது, நேற்று (23) மாலை அதுருகிரிய மற்றும் பத்தரமுல்ல பிரதேசங்களில், குற்றச் செயலுக்கு உறுதுணையாக இருந்த இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு, அதுருகிரிய பொலிஸாரிடம் ஆஜர்படுத்தப்பட்டனர்.
