இலவசமாக பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியோர்களுக்கு கண் கண்ணாடி வழங்கப்பட்டது.
இதனை நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அரச சார்பற்ற அமைப்பு மூலமாக கொத்மலை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள கொத்மலை ஹந்துனுவேவ மத்திய கல்லூரியில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.
இந் நிகழ்வில் நலிவுற்ற சமூகத்தை மேம்படுத்தும் அமைப்பின் (EVS) தலைவர் திருமதி சிவராஜன் ஸ்ரீ தலைமையில் இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று 2024.07.24 அன்று இடம்பெற்றது.
இதில் சுமார் 40 பாடசாலை மாணவ மாணவிகள் மற்றும் 25 பாடசாலை பெற்றோர்கள் , முதியவர்களுக்கு இலவசமாக மூக்கு கண்ணாடிகள் வழங்கப்பட்டன.
மஸ்கெலியா நிருபர்.
