மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள ஹொரன பெருந்தோட்ட யாக்கத்தின் 5 தோட்டத்தில் உள்ள 18 பிரிவில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்கள் நேற்று முதல் பணி பகிஸ்கரிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் இன்று காலை 11 மணிக்கு சாமிமலை நகரில் இருந்து ஆர்பாட்ட ஊர்வலமாக சாமிமலை ஓல்டன் சந்தி வரை வந்து குறித்த இடத்தில் சுமார் 30 நிமிடம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்ட காரர்கள் 1700/= வேதனம் வேண்டும், தோட்ட முமையாளர்கள் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் உள்ள வாகனங்களில் செல்லும் போது அவருக்கு சாரதி, சமையல் செய்யும் பணியாளர், தோட்ட வேலை செய்யும் ஆட்கள் என ஐந்து தொழிலாளர்கள் பெற்று கொள்வதுடன் எரிபொருள் வேதனம் என சுமார் 10 லட்சம் ரூபாய் வேதனம் பெரும் போது நாங்கள் அட்டை கடி, குளவி கொட்டு,விஷ ஜந்துக்கள் கடி, சிறுத்தை கடி, பாம்பு கடி,இடி, மின்னல்,மழை, கடும் காற்று அனைத்து ஆபத்தும் சமாளிக்க முடியாமல் பணி புரியும் எமக்கு மாதம் 60000/= ரூபாய் வேதனம் வேண்டும் என கோரிக்கை முன் வைத்தும் ,ஹொரன பெருந்தோட்ட யாக்கத்தின் பொது நிர்வாக அதிகாரி ரொஷான் ராஜதுரை அவர்களை இந்த வேதனத்தை கொடுக்க முடியாது எனில் உடன் தோட்டங்களை அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்து இந்த பணி மூட்டம் போராட்டம் இடம் பெற்றது.
.
மஸ்கெலியா நிருபர்.

