நான்கு பாடசாலை மாணவிகள் இன்று காலை குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிகப்பட்டனர்.
நல்லதண்ணி பொலிஸ் நிலைய பிரிவில் உள்ள நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்தில் கல்வி பயிலும் தரம் 7, தரம் 10 கல்வி பயிலும் பிரிந்தா வயது 12,ஹரணி வயது 12,சாரதா வயது 12, பிரியா வயது 15, ஆகிய மாணவிகள் இன்று காலை தங்களது வீட்டில் இருந்து நல்லதண்ணி தமிழ் வித்தியாலயத்திற்கு செல்லும் வழியில் மறே தோட்ட பகுதியில் வைத்து குளவி கொட்டுக்கு இலக்காகிய நிலையில் முச்சக்கர வண்டி மூலம் அழைத்து செல்லப்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர்.
