யாழ்ப்பாணத்தில் தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும் பொது மக்களும் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டுமென யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டு வேண்டுகோள் விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் மோசடிகளில் பலருடைய வங்கிக் கணக்குகளிலிருந்து பெருமளவிலான பணம் திருடப்பட்டுள்ளதால் எச்சரிக்கையாக இருக்குமாறும் யாழ்ப்பாண வணிகர் கழகம் அறிவுறுத்தியுள்ளது.
