இன்று (28) பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் காலை 3.00 மணிக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா கடற்பரப்பில் உள்ள நெடுநாள் கடற்றொழிலாளர்கள் மற்றும் கடல்சார் சமூகம் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் சப்ரகமுவ மாகாணம், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் இன்று (28) அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
