நேற்று (28) இரவு ஹபராதுவ – ஹருமல்கொட பகுதியில் துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இத் துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்ததுடன், அவர் முச்சக்கரவண்டியில் ஏற முற்பட்ட போது, துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் முச்சக்கரவண்டி மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதியும் காயமடைந்துள்ளார்.
துப்பாக்கிச் சூட்டில் 34 மற்றும் 54 வயதுடைய இருவர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் ஹபராதுவ மற்றும் அகுலுகஹா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
